ഡാനിയേലിന്റെ ധൃഢ നിശ്ചയം

ബി.സി.607-ആം വർഷത്തിൽ യെരുശലേമിന്റെ ആദ്യ ഉപരോധസമയത്ത്, ദാനിയേലിനെയും കൂട്ടാളികളെയും പിടികൂടി ബാബിലോണിലേക്ക് കൊണ്ടുപോയി.

ഹിസ്കീയാ രാജാവ് രോഗിയായിരുന്നപ്പോൾ ബി.സി.712-ആം വർഷത്തിൽ യെശയ്യാ പ്രവാചകൻ നടത്തിയ പ്രവചനത്തിന്റെ നിവൃത്തിയായിരുന്നു അത്. (യെശയ്യാവു 39: 6-7)

ബാബിലോണിലെ നെബൂഖദ്‌നേസർ രാജാവിന്റെ കൽപ്പനപ്രകാരം, ഇസ്രായേല്യരുടെ രാജകുടുംബത്തിൽ നിന്നും തിരഞ്ഞെടുക്കപ്പെട്ടവരിൽ ദാനിയേലും കൂട്ടരും ഉൾപ്പെടുന്നു. ഈ നാലു ചെറുപ്പക്കാരും ഇപ്പോൾ അവരുടെ വീട്ടിലെ സുഖസൗകര്യങ്ങളിൽ നിന്ന് മാറി വ്യത്യസ്ത സംസ്കാരം, ഭാഷ, ആചാരം, മതം എന്നിവയ്ക്കിടയിൽ ഒരു പുതിയ സ്ഥലത്തായിരുന്നു. അവർ ഇപ്പോൾ ബന്ദികളായിരിക്കുന്നു, ബാബിലോണിയൻ രാജാവായ നെബൂഖദ്‌നേസറുടെ കൽപ്പനകൾ പാലിച്ചില്ലെങ്കിൽ അവർക്ക് ഭയാനകമായ പ്രത്യാഘാതങ്ങൾ നേരിടേണ്ടിവരും. ബാബിലോണിയരുടെ ഭാഷയും സാഹിത്യവും അവരെ പഠിപ്പിക്കാനും രാജാവിന്റെ മേശയിൽ നിന്ന് അവർക്ക് ദിവസവും ഭക്ഷണവും വീഞ്ഞും നൽകാനും രാജാവ ഉത്തരവിട്ടിരുന്നു. ഇത് ചെയ്യുന്നതിലൂടെ, ഈ ചെറുപ്പക്കാരെ ബാബിലോണിയൻ സംസ്കാരത്തിലേക്ക് രൂപപ്പെടുത്താൻ രാജാവ് ആഗ്രഹിച്ചു. അവരുടെ പേരുകൾ പോലും മാറ്റി ബാബിലോണിയൻ ദേവതകളോട് സാമ്യമുള്ള പുതിയ പേരുകൾ നൽകി. (ദാനിയേൽ 1: 1-9)

പക്ഷേ, രാജകീയ ഭക്ഷണവും വീഞ്ഞും ഉപയോഗിച്ച് സ്വയം അശുദ്ധമാക്കരുതെന്ന് ദാനിയേൽ തീരുമാനിച്ചു. കുട്ടിക്കാലം മുതൽ തന്നെ ദാനിയേലിനെ മോശെയുടെ ന്യായപ്രമാണം പഠിപ്പിച്ചതിനാൽ, ലേവ്യപുസ്തകം 11-ൽ ഇസ്രായേല്യർക്ക് ശുദ്ധവും അശുദ്ധവുമായ ഭക്ഷണത്തെക്കുറിച്ച് നിയന്ത്രണം നൽകിയിട്ടുണ്ടെന്നും ഈ ചട്ടങ്ങൾ പാലിച്ചില്ലെങ്കിൽ അവർ അശുദ്ധരാകുമെന്നും അദ്ദേഹത്തിന് നന്നായി അറിയാമായിരുന്നു. കൂടാതെ അക്കാലത്ത്, ഭക്ഷണം തയ്യാറാക്കുന്നതിനുമുമ്പ്, മാംസവും വീഞ്ഞും വിഗ്രഹങ്ങൾക്ക് മുന്നിൽ വയ്ക്കുന്ന ഒരു സമ്പ്രദായമുണ്ടായിരുന്നു. വിഗ്രഹങ്ങൾക്ക് അർപ്പിക്കുന്ന ഭക്ഷണം ഇസ്രായേല്യർക്ക് കഴിക്കാൻ കഴിയില്ല എന്ന കാര്യവും ദാനിയേലിന് നന്നായി അറിയാമായിരുന്നു (വെളി 2:14, 2:20). രാജാവിന്റെ മേശയിൽ നിന്ന് ദിവസവും അവർക്ക് നൽകേണ്ട മാംസവും വീഞ്ഞും സംബന്ധിച്ച് സംശയമുണ്ടായിരുന്നതിനാൽ, അതിൽ നിന്ന് ഭക്ഷിക്കാനും കുടിക്കാനും അവൻ വിസമ്മതിച്ചു. ജന്മനാടിന്റെ സുഖസൗകര്യങ്ങളിൽ നിന്ന് ദാനിയേൽ പ്രതികൂല സാഹചര്യങ്ങളിലായിരുന്നു, പക്ഷേ അദ്ദേഹത്തിന്റെ ജീവിതം ഇപ്പോഴും ദൈവവചനത്താൽ നിയന്ത്രിക്കപ്പെട്ടു !!

ആരാണ് നിങ്ങളെ നിയന്ത്രിക്കുന്നത് ?

ജീവിത സാഹചര്യങ്ങളാൽ നിങ്ങൾ നിയന്ത്രിക്കപ്പെടുന്നുണ്ടോ അതോ നിങ്ങളുടെ ജീവിത സാഹചര്യങ്ങളെ നിയന്ത്രിക്കാൻ ദൈവവചനത്തെ അനുവദിക്കുകയാണോ ?

പ്രതിസന്ധിയിലായിരിക്കുമ്പോൾ, നിങ്ങൾ ദൈവവചനത്തെ സമീപിക്കുന്നുണ്ടോ ?

പ്രയാസകരമായ കഷ്ടതകളെയും കഷ്ടങ്ങളെയും അഭിമുഖീകരിക്കുമ്പോൾ, നിങ്ങൾ ക്രിസ്തുവിനായി ഉറച്ചുനിൽക്കുകയാണോ അതോ ഒഴുക്കിനൊപ്പം പോവുകയാണോ ?

പ്രതികൂല സാഹചര്യങ്ങളിൽ ദാനിയേലിനെപ്പോലെ ധൃഢ നിശ്ചയമുള്ളവരായിരിക്കാൻ ദൈവം നമ്മെ സഹായിക്കട്ടെ.

தானியேலின் உறுதி

கி.மு.607 ஆம் ஆண்டில் எருசலேமின் முதல் முற்றுகையின் போது, ​​தானியேலும் அவனது தோழர்களும் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் கி.மு.712 ஆம் ஆண்டில், எசேக்கியா ராஜா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஏசாயா தீர்க்கதரிசி செய்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகும். (ஏசாயா 39: 6-7)

பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாரின் கட்டளையின்படி, இஸ்ரவேல் அரச குடும்பத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தானியேலும் அவனுடைய தோழர்களும் அடங்குவர். இந்த நான்கு இளைஞர்களும் இப்போது தங்கள் வீட்டின் சுகபோகங்களிலிருந்து விலகி, வெவ்வேறு கலாச்சாரம், மொழி, வழக்கம் மற்றும் மதம் சார்ந்த மக்கள் மத்தியில் ஒரு புதிய இடத்தில் இருந்தனர். பாபிலோனியர்களின் மொழியையும் இலக்கியத்தையும் அவர்களுக்குக் கற்பிக்கவும், தனது மேசையிலிருந்து தினசரி உணவு மற்றும் மதுவை அவர்களுக்கு வழங்கவும் ராஜா உத்தரவிட்டிருந்தான். இதைச் செய்வதன் மூலம், இந்த இளைஞர்களை பாபிலோனிய கலாச்சாரத்தில் வடிவமைக்க ராஜா விரும்பினான். அவர்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டு பாபிலோனிய தெய்வங்களை ஒத்த புதிய பெயர்கள் வழங்கப்பட்டன. மேலும், அவர்கள் பாபிலோனிய ராஜா நேபுகாத்நேச்சாரின் கட்டளைகளைப் பின்பற்றாவிட்டால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஆனால், அரச உணவு மற்றும் திராட்சரசத்தால் தன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம் என்று தானியேல் தீர்மானித்தான். தானியேலுக்கு சிறுவயதிலிருந்தே மோசேயின் நியாயப்பிரமாணம் தெரிந்திருந்தபடியால், லேவியராகமம் 11-ஆம் அதிகாரத்தில்  இஸ்ரவேலர்களுக்கு சுத்தமான மற்றும் அசுத்தமான உணவு குறித்து கட்டுப்பாடு வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும், இந்த விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அவர்கள் தீட்டுப்படுவார்கள் என்பதையும் அவன் நன்கு அறிந்திருந்தான். மேலும், எந்தவொரு உணவையும் தயாரிப்பதற்கு முன்பு இறைச்சியையும் திராட்சரசத்தையும் சிலைகளுக்கு முன்னால் வைக்கும் வழக்கம் பாபிலோனியர்களுக்கு இருந்தது. இஸ்ரவேலர்கள், சிலைகளுக்கு வழங்கப்படும் பொருட்களை உட்கொள்வது அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு எதிரான காரியமாக இருந்தது (வெளி 2:14, 2:20). ஆதலால், ராஜாவின் மேசையிலிருந்து தினமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இறைச்சி மற்றும் திராட்சைரசத்தின் வகை குறித்து அவன் சந்தேகம் கொண்டிருந்ததால், அதிலிருந்து சாப்பிடவும் குடிக்கவும் அவன் மறுத்துவிட்டான். தானியேல் தனது தாய்நாட்டின் சுகபோகங்களிலிருந்து விலகி மோசமான சூழ்நிலையில் இருந்தான், ஆனால் அவனுடைய வாழ்க்கை இன்னும் தேவனுடைய வார்த்தையால் கட்டுப்படுத்தப்பட்டது !!

உங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

நீங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறீர்களா அல்லது கடினமான சூழ்நிலைகள் மத்தியிலும் நீங்கள் தேவனுடைய வார்த்தையால் கட்டுப்படுத்தப்படுகிறீர்களா?

நீங்கள் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய வார்த்தையை கலந்தாலோசிப்பதன் மூலம் முடிவுகளை எடுக்கிறீர்களா?

கடினமான சோதனைகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் போது, ​​நீங்கள் கிறிஸ்துவுக்காக உறுதியாக நிற்கிறீர்களா அல்லது ஓட்டத்துடன் செல்கிறீர்களா?

கடினமான சூழ்நிலைகளிலும் தானியேலை போல் உறுதியுடன் இருக்க கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.

கர்த்தர்தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.